Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

Siva
சனி, 22 மார்ச் 2025 (17:56 IST)
வங்கிக் கிளைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக மாற்ற வேண்டும், வங்கிகளில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
 
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.) மற்றும் தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்த சந்திப்பின்போது, தொழிலாளர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால், வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்ததாக யு.எப்.பி.யு. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments