Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடக்கம்?

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (08:25 IST)
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம், வார விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை எனத் தொடர்ந்து வருவதால் அடுத்த 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வேலைநிறுத்தத்துக்கானக் காரணங்களாக ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்தல், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பை கைவிட வேண்டும், ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளது போல மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளன.

இதனால் இன்று வங்கிகள் திறந்திருந்தாலும் முக்கியமான சேவைகள் அனைத்தும் முடங்கும் எனத் தெரிகிறது. அது போல நாளை 4 ஆவது சினிக்கிழமை விடுமுறை, அடுத்த நாள் ஞாயிறு வார விடுமுறை, அதற்கடுத்த நாள் கிறிஸ்துமஸ் விடுமுறை, அதற்கடுத்த நாள் 26-ம் தேதி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் கூட்டாக வேலைநிறுத்தம் எனத் தொடர்ச்சியாக வங்கிகள் முடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments