வங்கி கணக்குகள் முடக்கம்..! காங்கிரஸ் மனு தள்ளுபடி.!!

Senthil Velan
புதன், 13 மார்ச் 2024 (15:44 IST)
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
 
இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
 
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மனு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments