Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீபோற்சவ நிகழ்வில் 25 லட்சம் விளக்குகள்: கின்னஸ் சாதனை..!

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (08:17 IST)
அயோத்தியில் நடந்த தீபோற்சவ  நிகழ்வில் ஒரே நேரத்தில் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று நடைபெற்ற எட்டாம் நாளாக இந்த தீபோற்சவ நிகழ்வு சரயு படித்துறையில் 1121 பேர் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தி 25 லட்சம் விளக்குகளை ஏற்றினர். இது கின்னஸ் உலக சாதனைக்காக படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், அமைச்சர்களும் இணைந்து விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாட்டத்தை தொடங்கினர். சரயு படித்துறையில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும், 1121 பேர் ஒரே நேரத்தில் வழிபாடு நடத்தியதாகவும் இரண்டு உலக சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீபோற்சவ நிகழ்ச்சியை ஒட்டி சுமார் 5000 முதல் 6000 பேர் பங்கேற்க அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏழு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் தீபோற்சவ நிகழ்வு நடந்து வருவதால், இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு: இமெயில் வந்ததால் பரபரப்பு..!

பாதிக்கும் மேல் சரிந்த தீபாவளி வியாபாரம்.. திநகர் வியாபாரிகள் சொல்வது என்ன?

அயோத்தி தீபோற்சவ நிகழ்வில் 25 லட்சம் விளக்குகள்: கின்னஸ் சாதனை..!

தீபாவளி எதிரொலி; சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!

தீபாவளிக்கு ‘அமரன்’ படம் கண்டுகளித்த முதல்வர், துணை முதல்வர்! - படக்குழுவினருக்கு வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments