Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன?

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:23 IST)
அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புனரமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 22ஆம் தேதி இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் ராமர் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அயோத்தி ரயில் நிலையம் கடந்த சில மாதங்களாக புனரமைக்கப்பட்டது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில்  டிசம்பர் 30ஆம் தேதி புனரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் இதுவரை அயோத்தி ரயில் சந்திப்பு என்ற பெயர் இருந்த நிலையில் இனிமேல் அது அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.  அயோத்தி தாம் என்றால் ராமர் சீதையின் இருப்பிடம் என்பது பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments