Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரச் சக்திப் பெறுவதற்காகச் சிறுவனின் உடல் உறுப்புகளை சமைத்துத் தின்ற ஆட்டோ ஓட்டுநர்

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2014 (11:28 IST)
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மந்திரச் சக்திப் பெறுவதற்காக 9 வயது சிறுவனை நரபலி கொடுத்து உடல் உறுப்புகளை சமையல் செய்து சாப்பிட்டுள்ளார்.
 
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின் பகுதியில் கண், சிறுநீரகம் மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் 9 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 
 
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் வீட்டருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர் முன்னா பதான் (வயது 40) என்பவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனைக் காவல்துறையினர் விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளான். இறுதியாக அவன், சிறுவன் ருபேஷை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளான்.
 
தான் பெரிய மந்திரவாதியாக வேண்டும் முன்னா பதான் ஆசைப்பட்டுள்ளான். ஆனால் அவனால் மந்திரச் சக்திகளைப் பெற முடியவில்லை. இதனால் சிறுவனை நரபலி கொடுத்தால் மந்திரச் சக்தி கிடைக்கும் என்று கருதியுள்ளான்.
 
இதனால் தனது நண்பரின் மகனான ருபேஷை கடத்தி சென்றுள்ளான். அங்கு அந்த சிறுவனை ஈவு இரக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். பின்னர் அவனது கண், சிறுநீரகம் மற்றும் மர்ம உறுப்பைகளை கொடூரமாக வெட்டி எடுத்துள்ளான்.
 
பின்னர் சிறுவனின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளை சமையல் செய்து முன்னா பதான் சாப்பிட்டுள்ளான். பின்னர் குளித்துவிட்டு அதிகாலை 4 மணி வரை பல்வேறு பூஜைகள் செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளான்.
 
இதையடுத்து காவல்துறையினர் அவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments