Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோழியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல்!

Webdunia
புதன், 17 மே 2023 (18:54 IST)
பீகார் மாநிலத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்த தோழி ஒருவரை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பாட்னா மாவட்டம் பிர்பஹூரி என்ற பகுதியில் வசிப்பவர் சாகர் குமார் மிஸ்ரா.

இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடன்  ஒரே வகுப்பில் படித்து வரும் தோழியை நேற்று மாலை தன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர் மிஸ்ரா, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்திய தோழியுடன் பைக்கில் சென்றபோது,  அப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர் சிலர், இருவரையும் இடைமறித்து, மிஸ்ராவுடன் இருந்த பெண்ணை மிரட்டி வீட்டிற்குச் செல்லும்படி கூறினர்.

அப்பெண் வீட்டிற்குச் சென்றபின், மாணவியை பைக்கில் அழைத்துச் சென்ற மிஸ்ராவை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments