Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடர்கள் மீது தாக்குதல் : கர்நாடகாவில் கொந்தளிப்பு

கன்னடர்கள் மீது தாக்குதல் : கர்நாடகாவில் கொந்தளிப்பு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (14:03 IST)
கோவாவில் வசித்து வந்த  கன்னட குடும்பத்தினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட விவகாரம், கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 28 கி.மீ, தூரம் உள்ள பகுதி ஃபோண்டா. அங்கு, கடந்த 40 வருடங்களாக 5 கன்னட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில், அங்கு வசிக்கும் கன்னடர் ஒருவர், கோவா மாநிலத்தவர் நடத்தும் ஒரு கடையில் வாக்குவாதம் செய்துள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் வாசிகள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று, 5 கன்னட குடும்பத்தினரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், மற்றும் கார்களுக்கு தீ வைத்தனர். 
 
இதனால் உயிருக்கு பயந்து அந்த 5 கன்னட குடும்பத்தினரும், கோவாலில் இருந்து வெளியேறி, கர்நாடக மாநிலம் பெலகாவிற்கு திரும்பிவிட்டனர். 
 
இந்த சம்பவம் கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னடர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சில கன்னட அமைப்புகள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். மேலும், பெலகாவிற்கு வரும் கோவா மாநிலத்தவரை பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என்று கூறியுள்ளனர். 

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments