Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதற்றமான மேற்கு வங்கம், அசாமில் நாளை தேர்தல்! – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:26 IST)
இந்தியாவில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாளை மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பதற்றத்திற்குரிய மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுபோல அசாமில் 126 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments