Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியிலிருந்து பாதியிலேயே விலகியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
புதன், 21 மே 2014 (16:13 IST)
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது தவறெனவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி,ஆட்சியில் இருந்து பாதியிலேயே விலகியதை அடுத்து அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

மேலும், நாடு முழுவதிலும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஆதாவு இல்லாமல் போனது.
 
இந்நிலையில், டெல்லியில் ஆட்சியிலிருந்து பாதியிலேயே விலகியதற்கு, மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் தெரிவித்தபோது, ஆட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறியது மிகப்பெரிய தவறு.டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கும் எண்ணமில்லை.
 
நாங்கள் எங்களது கொள்கைகளுக்காக பதவி விலகினோம். ஆனால், மக்களுக்கு அது பிடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

Show comments