Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 11.30 மணிக்கு முடிவுகள்: தேர்தல் ஆணையம்..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (08:18 IST)
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மக்களவை தேர்தலுடன் அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
 
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அருணாச்ச பிரதேசத்தில்  24 இடங்களில் நடைபெறும் வாக்கு  எண்ணிக்கை நடைபெறுவதாகவும், அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 11.30 மணிக்கு தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல் சிக்கிம் மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஒரு சில மணி நேரங்களில் இந்த மாநிலத்தில் பதிவான சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை குறித்த முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது ஜூன் நான்காம் தேதி இந்தியா முழுவதும் பதிவான பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அன்றைய இரவே கிட்டத்தட்ட புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments