Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய செலாவணி சந்தையில் புதிய நம்பிக்கை - அருண் ஜெட்லி

Webdunia
புதன், 9 ஜூலை 2014 (18:19 IST)
ஆண்டு சராசரி பணப் பரிமாற்ற விகிதம் அதிகரித்துள்ளது; ரூபாயின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அது அந்நிய செலாவணி சந்தையில் மற்ற துறைகளைப் போல் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 2014 ஜூலை 9 அன்று பொருளாதார ஆய்வு அறிக்கை 2013-14-ஐச் சமர்ப்பிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். 
 
2011-12 ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 47.92 இருந்தது. அது 2012-13ஆம் ஆண்டில் ரூ.54.41 ஆக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 2013-14 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 60.50 ஆக இருந்தது.
 
2013-14ஆம் ஆண்டில் எதிர்பார்த்த அளவு அந்நிய செலவாணி சந்தையில் கையிருப்பு இல்லை, அதுவே பெருமளவில் ரூபாய் மதிப்பின் சரிவிற்குக் காரணமாக இருந்தது. ஆனால், அண்மையில் ரூபாயின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அது அந்நிய செலாவணி சந்தையில் மற்ற துறைகளைப் போல் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

Show comments