Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ அதிகாரிகளை தாக்கி, பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! சுற்றுலா சென்றபோது நடந்த விபரீதம்..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (12:01 IST)
இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களுடைய பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றபோது, அவர்களில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களுடைய பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றனர். நான்கு பேரும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏழு பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ஒரு பெண்ணை அந்த கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து ராணுவ அதிகாரி தங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய நிலையில் உடனடியாக போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்து அந்த கும்பல் தப்பி விட்டதாகவும் தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அதிர்ச்சியில் உள்ள நிலையில் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவன் என்றும் கூறப்படுகிறது. மீதமுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்