அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்; நீதிமன்றம் உத்தரவு

Siva
திங்கள், 1 ஏப்ரல் 2024 (12:05 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்திய நிலையில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை காவல் நீடித்து  நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments