Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல் கலாம் பெயரை மாற்றி எழுதிய நடிகை அனுஷ்கா சர்மா

அப்துல் கலாம் பெயரை மாற்றி எழுதிய நடிகை அனுஷ்கா சர்மா
, செவ்வாய், 28 ஜூலை 2015 (15:43 IST)
பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் காதலியுமாகிய நடிகை அனுஷ்கா சர்மா மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை மாற்றி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், நேற்று திங்கட்கிழமை இரவு மேகாலயாவின் ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 
இளைஞர்களின் ஆதர்ஷமாக விளங்கிய அவருக்கு நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து பல தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் செய்திகளும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
 
webdunia

 
மேலும், பலரும் சமூக வலைதளைங்களில் அஞ்சலி தெரிவித்துவரும் நிலையில், நடிகை அனுஷ்கா சர்மா, அப்துல் கலாமிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த செய்தியில், ஏபிஜே அப்துல் கலாம் என்பதற்கு பதிலாக, ஏபிஜே கலாம் ஆசாத் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
webdunia

 
இதனால், பொதுமக்களும், ரசிகர்களும் தங்களது கோபத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். சாதாரண பாமர மக்கள் கூட சரியாகத் தெரிந்து வைத்திருக்கும் அப்துல் கலாமின் பெயர், ஏன் அனுஷ்கா சர்மாவிற்கு தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
 
இதனால் உடனே சுதாரித்துக் கொண்ட அனுஷ்கா சர்மா சற்று நேரத்தில், தான் பதிவேற்றம் ட்விட்டர் செய்தியை நீக்கி விட்டு புதிய ட்விட்டர் செய்தியை பதிவேற்றியுள்ளார். அதில் சரியாக அப்துல் கலாம் பெயரை பதிவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil