Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.2000 நோட்டுக்கு ஆபத்தா? சு.சுவாமியின் திட்டம் பலிக்குமா?

ரூ.2000 நோட்டுக்கு ஆபத்தா?  சு.சுவாமியின் திட்டம் பலிக்குமா?
, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (23:15 IST)
கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அசாதாரண நிலைமை ஏறப்ட்டது. பின்னர் ஒருவழியாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 வெளியிட்டு இந்திய ரிசர்வ் வங்கி சமாளித்தது.





ஆனாலும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது மத்திய அரசின் அதிருப்தியாக உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றும் முன்னரே சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் சிலர் கூறிய அறிவுரை ரூ.2000 வேண்டாம் என்பதுதானாம். அதற்கு பதிலாக ரூ.200 நோட்டு வெளியிடுங்கள் என்று அறிவுரை கூறியும் நிதியமைச்சகமும் , ரிசர்வ் வங்கியும் அவரது பேச்சை கேட்கவில்லையாம்.

இந்த நிலையில் சுவாமி கூறியது போல மீண்டும் ரூ.2000ஐ முடக்கிவிட்டு அதற்கு பதிலாக ரூ.200ஐ வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைரியம் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வா! கனடா பிரதமர் அதிரடி