Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தடவ நான் சொல்றத கேளு..! செல்பியில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (13:00 IST)
ஆந்திராவில் காதல் தோல்வியால் மாணவி ஒருவர் காதலனுக்கு வீடியோ கால் அழைத்து தூக்கு போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவ பார்கவ் என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

சிவபார்கவை சமாதானம் செய்ய ரம்யா பலமுறை முயன்று பார்த்துள்ளார். ஆனால் ரம்யாவை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்கிறார் சிவபார்கவ். இதனால் மனமுடைந்த ரம்யா தனது அறையில் தூக்கு மாட்டிக்கொண்டதோடு அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சிவபார்கவுக்கு அனுப்பி தன்னிடம் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து பதில் வராததால் விரக்தியடைந்த ரம்யா வீடியோவை ஆன் செய்து வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரம்யா செல்போனில் உள்ள வீடியோக்களை கொண்டு சிவபார்கவ் மற்றும் ரம்யாவின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments