Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைப்பு பெட்டிகள் இல்லாமல் 10கிமீ சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சின்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (08:00 IST)
எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இணைப்பு பெட்டிகள் இல்லாமல் எஞ்சின் மட்டும் சுமார் பத்து கிலோமீட்டர் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒடிஸா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் இருந்து ஐதராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் என்ஜின் உடன் இணைக்கப்பட்டு இந்த இணைப்பு பெட்டிகளில் இணைப்பு கம்பிகள் திடீரென கழன்று விழுந்தது. இதனை அடுத்து எஞ்சின் தனியாகவும் பெட்டிகள் தனியாகவும் பிரிந்தது. எஞ்சினில் இருந்து பெட்டிகள் பிரிந்ததை அறியாத எஞ்சின் டிரைவர், எஞ்சினை மட்டும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்றுவிட்டார் 
 
இதன்பின்னர் எஞ்சினில் இருந்து கழன்ற பெட்டிகள் நடுவழியில் தன்னந்தனியாக நின்றததை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயில்வே துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின் ரயில்வே துறை என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்து மீண்டும் எஞ்சின், பெட்டிகள் இருக்கும் இடத்திற்கு பின்னால் வரவழைக்கப்பட்டது. அதன்பின் ரயில்வே பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எஞ்சினையும் பெட்டிகளையும் இணைத்தனர்
 
இந்த நிகழ்வு காரணமாக விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments