Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிடிவாரண்ட்டிலிருந்து தப்பித்தார் தோனி

பிடிவாரண்ட்டிலிருந்து தப்பித்தார் தோனி
, புதன், 20 ஜனவரி 2016 (12:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ஆந்திர மாநிலம் அனந்தப்பூர்  நீதிமன்றம் திரும்ப பெற்றது.


 

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிசினஸ் டுடே என்ற இதழின் அட்டைப்படத்தில் தோனியை கடவுள் விஷ்ணு போல் சித்தரித்து ஒரு படம் வெளியாகியிருந்தது. அதற்கு   ‘காட் ஆப் பிக் டீல்ஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தனர். அந்த படம் அப்போது பலத்த சர்ச்சைக்குள்ளானது. மேலும், தோனிக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோனி போன்ற பிரபலங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் நடந்து கொள்ளக்கூடாது. மேலும், அதன் பின்விளைவை பற்றி உணர வேண்டும் என்று கண்டித்தது.

ஆனால் நான் கடவுள் போல் போஸ் கொடுக்கவில்லை. அதற்காக தனக்கு பணம் எதுவும் தரப்படவில்லை. அந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தோனி தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. மேலும் தோனி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அது தொடர்பான வழக்கு அனந்தப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதி தோனிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை அளித்து தீர்ப்பளித்தனர். இது நாடெங்கும் உள்ள தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் அவர் பிப்ரவரி 25ம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ர்ஜனீஷ் சோப்ரா மற்றும் பங்கஜ் பக்லா ஆகியோர் நேற்று அனந்தப்பூர்  நீதிமன்றத்தில் ஆஜராகி டோனியிடம் பிடிவாரண்ட் போய்ச் சேரவில்லை என்று அவர் சார்பில் விளக்கம் அளித்தனர்.  அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிடிவாரண்ட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil