Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிச்சுட்டு வந்து பேசுறீயா? எந்த கட்சிக்காரன் நீ?: கேள்வி கேட்டவரை திட்டி தீர்த்த முதல்வர்!

குடிச்சுட்டு வந்து பேசுறீயா? எந்த கட்சிக்காரன் நீ?: கேள்வி கேட்டவரை திட்டி தீர்த்த முதல்வர்!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (12:00 IST)
தங்கள் பகுதியில் மின்சாரம் விநியோகம் அவ்வளவு சீராக இல்லை என புகார் கூறியவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக திட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தெலுங்கு தேசம் கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, மின்சார விநியோகம் குறித்து பெருமையாக பேசினார். நந்தியாலா தொகுதியில் மின்சார விநியோகம் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டார்.
 
அப்போது எழுந்து ஒரு நபர் தங்கள் பகுதியில் மின்சார விநியோகம் சீராக இல்லை என புகார் கூறினார். இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, நீ எந்த கட்சிக்காரன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸா? உன்னை இங்கே அனுப்பினது யார்? முதல்வராகிய என்னிடமே மக்கள் முன்னிலையில் கேள்வி கேட்கிறாயா? நீ குடிச்சிட்டு வந்திருக்கியா? என கேட்டுக்கொண்டே போனார் அவர்.
 
மேலும் ஒரு நபர் தனக்கு விவசாய தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை என புகார் கூறினார். அவரிடமும் நீயும் குடித்திருக்கிறாயா என கோபமாக கேட்டார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவரின் இந்த அனுகுமுறை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments