Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2016 (18:26 IST)
ஆண்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். வெளிநாட்டினர் அளவோடு குடிக்கின்றனர் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


 
 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசி சந்திரபாபு நாயுடு, வெளிநாட்டினர் அளவுக்கு அதிகமாக குடிப்பதில்லை அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு பெக் அளவுக்குத்தான் குடிக்கிறார்கள்.
 
ஆனால் நம் நாட்டில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதையில் வீட்டில் மனைவியை அடித்து கஷ்டப்படுத்துகிறார்கள். மது போதையில் பெண்களை கை நீட்டி அடிப்பது மிகவும் மோசமான செயல்.
 
ஆண்கள் அதிகமாக மது அருந்துவிட்டு மனைவியை அடிக்கும் நாகரிகமற்ற செயலை கைவிட வேண்டும். மது குடிக்கும் பணத்தில் மரக்கன்று நட்டால் அது உங்களுக்கு பெரிய புண்ணியத்தை தரும் என்றார் சந்திரபாபு நாயுடு.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments