Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் கொடுக்க சென்ற பெண்ணிற்கு செக்ஸ் தொல்லை - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (12:29 IST)
ஆந்திராவில்  காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற இளம்பெண்ணிற்கு போலீஸ்காரர் ஒருவர் செக்ஸ் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
 
மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸிடம் செல்வர், ஆனால் போலீஸே பிரச்சனை செய்தால் யாரிடம் செல்வது. ஒரு சில காவல் அதிகாரிகள் செய்யும் கீழ்த்தரமான வேலை, ஒட்டுமொத்த காவல்துறைக்குமே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்த சம்யுக்தா என்ற பெண் அவரது கணவர் மீது புகார் கொடுக்க பீலேரு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 
அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் தேஜோமூர்த்தி, சம்யுக்தாவிடம் புகார் பெற்றுக் கொண்டார். அத்தோடு சம்யுக்தாவின் போன் நம்பரையும் வாங்கிக் கொண்ட தேஜோமூர்த்தி, அந்த பெண்ணிற்கு சமீபத்தில் போன் செய்து உன் கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் என் ஆசைக்கு இணங்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்காமல் சம்யுக்தா போனை கட் செய்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று சம்யுக்தாவை போனில் தொடர்புகொண்ட தேஜோமூர்த்தி, தனியாக அறை எடுத்துள்ளேன் உடனடியாக புறப்பட்டு வா என கொச்சையாக பேசியுள்ளார்.
 
பொறுமையாய் இருந்த சம்யுக்தா,  தேஜோமூர்த்தியின் அட்டூழியங்கள் அதிகரிக்கவே, இதுகுறித்து அவர் டி.ஐ.ஜி. சீனிவாசராவிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி புகார் அளித்தார். இதனையடுத்து தேஜோமூர்த்தி உடனடியாக சஸ்பண்ட் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்