Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது: அமைச்சர் அமித்ஷா உறுதி..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (10:30 IST)
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் நிறைவேறிய பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி எந்த வழக்கும் நீடிக்காது என்றும் இதன் மூலம் 70% வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது. 
 
இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நீதி மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு மசோதா, பாரதீய சாட்சியங்கள் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த 3 மசோதாக்கள் நிறைவேறிய பிறகு, எந்த வழக்கும் 2 இனி ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. இந்த 3 சட்டங்களை அமல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்’ என்றும் அமித்ஷா கேட்டு கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments