Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா: நிராகரித்த விவசாயிகள்!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:18 IST)
பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா: நிராகரித்த விவசாயிகள்!
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் டெல்லியில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த அழைப்பை நிராகரிப்பதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது
 
டெல்லி ஜந்தர் மந்தருக்கு வருமாறு வருமாறு அமைச்சர் அமித்ஷா விடுத்த அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நிராகரித்துள்ளதால் போராட்டம் மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது. வேளாண் மசோதாவை நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியுடன் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments