Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் படுகாயம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் படுகாயம்
, வெள்ளி, 8 ஜனவரி 2016 (06:21 IST)
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் நடைபெற்ற ஒரு திரைப்பட சூட்டிங்கின் போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் படுகாயம் அடைந்தார். 
 

 
டிஇ3என் என்ற திரைப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வருகின்றார். இப்படத்தின் சூட்டிங், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் நடைபெற்றது. அப்போது, நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து, சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.
 
இந்த சம்பவம் குறித்து, நடிகர் அமிதாப் பச்சன், தனது டுவிட்டர் பக்கத்தில், எனது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இது சாதாரணமானது. ரசிகர்கள் கவலை கொள்ளவேண்டாம். இன்னும் சில நாட்கள் என்னால் சூட்டிங்கில் கலந்து கொள்ளமுடியாது. உடல்நிலை சரியான உடன் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil