Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுமைக்கும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் திட்டமில்லை - அமித் ஷா

Webdunia
வியாழன், 28 மே 2015 (18:41 IST)
நாடு முழுமைக்கும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக கோவா மாநிலம், பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
 
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் திட்டமில்லை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதுகுறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பாஜக ஆட்சி, எந்த மாநிலத்தில் நடைபெற்றாலும் சரி, அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதற்கு முன்பு அங்குள்ள மக்களின் உணர்வுகளை பரிசீலித்த பிறகே முடிவு செய்வோம். கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில மக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, இந்த முடிவை கோவா அரசு எடுத்துள்ளது.
 
மாட்டிறைச்சியை சாப்பிட விரும்புபவர்கள், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தது குறித்து கேட்கிறீர்கள். அது, அவருடைய தனிப்பட்ட கருத்து. கட்சித் தலைவராக இருப்பதால், அதுகுறித்து தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் என்னால் தெரிவிக்க இயலாது என்றார் அமித் ஷா.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments