Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர் கான் நரேந்திர மோடிக்கு எதிரானவர் - இல.கணேசன்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (08:55 IST)
அமிர் கானின் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர் தான் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து ஈரோடு சூரம்பட்டியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’இந்தியா எப்போதுமே சகிப்துத் தன்மை கொண்ட நாடு தான். இங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும் சகிப்புத்தன்மை உடையவர்கள் தான். 
 
ஹிந்தி திரைப்பட நடிகர் ஆமிர் கானின் செயல்பாட்டை ஆரம்பம் முதல் உற்றுப் பார்த்தால் அவர் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர் தான் என்பது புரியும்.
 
பிரதமராக மோடி பதவியேற்றதை சகித்துகொள்ள முடியாமல் சகிப்புத்தன்மையின்றி இதுபோன்று அவருக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் இருந்த கட்சிகளில் மதிமுகவை தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் எங்களுடன் தான் இருக்கின்றன. அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

வாஜ்பாய் ஆட்சியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் மோடி ஆட்சியிலும் தொடர்கின்றன. இதுபோல, ஆட்சிகளை ஒப்பிடும்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி நல்லாட்சி என்று என்னால் கூற முடியாது’’ என்று தெரிவித்தார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments