Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம் இல்லம் காலி - மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்பிய உத்தவ் தாக்கரே!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (08:42 IST)
உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் உள்ள முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை நேற்றிரவு காலி செய்தார். 

 
மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அதுமுதல் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்து வருகிறார். 
 
இதனிடையே சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 40 பேருடன்  அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை நேற்றிரவு காலி செய்தார். அரசு இல்லத்தில் இருந்து உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் பந்த்ராவில் உள்ள சொந்த வீடானா மாதோஸ்ரீ பங்களாவிற்கு குடிபெயர்ந்தார். மாதோஸ்ரீ இல்லம் முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி உத்தவ் தாக்கரேவை வரவேற்று முழக்கங்கள் எழுப்பினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments