Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 4: இந்தியாவிற்கு கெடு விதித்த அமெரிக்கா!

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (16:30 IST)
கச்சா எண்ணேய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இராக், சவுதி அரேபியாவை அடுத்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து பெறப்படுகிறது.   
 
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.   
 
அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. 
 
இதனையடுத்து, அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை நிறுத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், தற்போது புதிதாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4 ஆம் தேதிக்குள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி கெடு விதித்துள்ளது.
 
அதேபோல், ஈரானுடன் எத்தகைய தொழில் ரீதியான தொடர்புகளை வைத்துள்ள நிறுவனங்களும் அதை 180 நாள்களுக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments