அமேசான் நிறுவனத்தின் லாரி திடீர் மாயம்: ரூ.10 லட்சம் பொருட்களுடன் டிரைவர் தலைமறைவு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (07:45 IST)
அமேசான் நிறுவனத்தின் லாரி திடீர் மாயம்: ரூ.10 லட்சம் பொருட்களுடன் டிரைவர் தலைமறைவு!
ரூபாய் 10 லட்சம் பொருட்களுடன் வந்த அமேசான் லாரி திடீரென மாயமாகி விட்டதை அடுத்து அந்த லாரி டிரைவருக்கு போலீசார் வலை வீசி உள்ளனர். 
 
டெல்லியில் இருந்து சேலத்துக்கு வந்த அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில் மொபைல் போன் லேப்டாப் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருள்கள் இருந்தது
 
இந்த நிலையில் இந்த லாரி ஹரியானா அருகே வந்தபோது திடீரென மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இந்த லாரியை கண்டுபிடித்தபோது, லாரியில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான செல்போன் லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப் பட்டதாதாகவும் டிரைவர் தலைமறைவாகி விட்டதாகவும் டிரைவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments