Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் டோல்கேட் மூடப்படும், ஆனால் கட்டணம் உண்டு: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:34 IST)
அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் டோல்கேட்டுகள் மூடப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். டோல்கேட் நிலையத்தில் வாகனங்கள் வரிசையாக காத்திருப்பதை முன்னிட்டு பாஸ்ட் ட்ராக் என்ற முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த முறையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. மீண்டும் வாகனங்கள் வரிசையாக நிற்கும் அவலங்கள் ஏற்படுகின்றன. 

இதனை அடுத்து அனைத்து டோல்கேட்டுகளையும் மூடிவிட்டு அதற்கு பதிலாக நம்பர் பிளேட் ரீடிங் கருவிகள் அல்லது ஜிபிஎஸ் முறையில் வசூல் செய்யும் முறை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது
 
இதற்கான தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்து டோல்கேட்களும் மூடப்பட்டு நம்பர் பிளேட்டிங் ரீடிங் அல்லது ஜிபிஎஸ் முறையில் வசூல் வசூலிக்கப்படும் என்றும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments