Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச விவகாரம்.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

Siva
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (10:49 IST)
வங்கதேச விவகாரம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை  அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேச விவகாரம் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார் என்றும், வங்கதேசத்தில் தற்போதைய நிலவரம், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, சர்வதேச எல்லை பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது,

முன்னதாக வங்கதேசத்தில் நடந்து வரும் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததாகவும் வங்கதேச நிலவரம் தொடர்பாக சில ஆலோசனைகளை ராகுல் காந்தி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய வங்கதேச எல்லையை பாதுகாக்கவும் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments