Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி விடிய விடிய இலவசமாக பேசலாம்; பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை

இனி விடிய விடிய இலவசமாக பேசலாம்; பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
, திங்கள், 20 ஏப்ரல் 2015 (13:55 IST)
பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனம் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
 
செல்போன் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணத்தையும், எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, கணிசமாக குறைத்து, மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
 

 
தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல். இந்தியா முழுவதிலும் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆனாலும், கடந்த 10 வருடத்தில் நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள்  சரண்டர் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வருவதாலும், பிற நிறுவவங்களுடனான போட்டியை சமாளிக்கவும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் புதுப்புது திட்டங்களை அறிவித்தது.
 
இந்நிலையில் நிறுவனம் தனது அதிரடி கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது. அதாவது, பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் [லேண்ட் லைன்] இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது.
 
கட்டண விவரம் அடுத்தப் பக்கம்..

இது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின் செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம். இதற்கான மாத கட்டணமாக தரைவழி இணைப்புகளுக்கு 120 ரூபாய் முதல் 200 வரை வசூலிக்கப்படும்.
 
webdunia

 
இந்த அதிரடி சலுகை திட்டம் மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. தற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்–க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil