Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுவிலக்கு கஷ்டம்; வேணும்னா கம்மியா குடிங்க : சொல்வது யார் தெரியுமா?

மதுவிலக்கு கஷ்டம்; வேணும்னா கம்மியா குடிங்க : சொல்வது யார் தெரியுமா?
, வியாழன், 26 மே 2016 (13:31 IST)
அப்படியெல்லாம் மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியாது என்றும், வேண்டுமானால் குடிமகன்கள் சரக்கை குறைவாக குடியுங்கள் என்றும் உத்திரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


 

 
பீகாரில் கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு அமுலபடுத்தப்பட்டது. இதனால் பீகார் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடினர். ஆனால், அதன் அண்டை மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மது தாராளமாக கிடைக்கிறது. 
 
எனவே பீகார் குடிமகன்கள், உத்திரப்பிரதேசம் சென்று மது அருந்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், உத்திரபிரதேசத்திலும் மதுவிலக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

webdunia

 

 
இதுபற்றி பத்திரிக்கையாளர்கள், அகிலேஷ் யாதவிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அகிலேஷ் “உத்திரபிரதேசத்தில் திடீரென மதுவிலக்கு கொண்டுவர முடியாது. ஏனெனில், அதை நம்பி ஏராளமான கரும்பு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், மதுவிற்பனையை நம்பி லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
 
வேண்டுமானால், குடிமகன்கள் அதிகமாக குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தலாம்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதின்ம வயது பெற்றோரும் பல பிரச்சனைகளும்