Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் எதிர்க்கட்சிகள் பக்கோடா விற்க போக வேண்டும்: அகிலேஷ் யாதவ்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (21:55 IST)
பாரளுமன்றத்திற்கு வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் வியூகம் அமைத்து வருகின்றன.  எதிர்க்கட்சி கூட்டணி பலமாக இருந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்ரு கூறப்படுகிறது.

இந்த நிலையில்  பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலை ஏற்படும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார்.

உபியில் இன்று சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் 'மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்' என்று பேசியுள்ளார். அவருடைய பேச்சு வேடிக்கையாக இருந்தாலும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments