Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகதான் டார்கெட்.. ஒன்று சேரும் எதிர்கட்சிகள்! – மம்தா யோசனைக்கு ஓகே சொன்ன அகிலேஷ் யாதவ்!

Webdunia
புதன், 17 மே 2023 (08:42 IST)
அடுத்த ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்த மம்தா பானர்ஜியின் யோசனையை அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.

அடுத்த 2024ம் ஆண்டுடன் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடையும் நிலையில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி செய்து வருகிறது பாஜக. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார் என பல மாநில தலைவர்கள் மற்ற எதிர்கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்த திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மம்தாவின் இந்த முயற்சியை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ் “மக்களவை தேர்தலில் ஒரு மாநிலத்தில் எந்த கட்சி வலுவாக உள்ளதோ அந்த கட்சியின் தலைமையை ஏற்று மற்ற கட்சிகள் போட்டியிட முன்வர வேண்டும்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments