Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியை மதிக்காமல் வேட்பாளரை அறிவித்த அகிலேஷ்! ராகுல் காந்தி அதிர்ச்சி..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:58 IST)
காங்கிரஸ் கட்சியை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திடீரென 16 பேர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டணியை உருவாக்க காரணமாக இருந்தவரான நிதீஷ்குமாரே அதிலிருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக கூறியிருந்த அகிலேஷ், காங்கிரஸ் அதை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதை கூட கண்டுகொள்ளாமல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட 11 தொகுதி எது என்பதை கூட முடிவு செய்யாத நிலையில் திடீரென அகிலேஷ் யாதவ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசிக்காமல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை முடிக்காமல் தன்னிச்சையாக அகிலேஷ் யாதவ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments