அரச குடும்பத்தின் வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜா அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Mahendran
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:36 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, குஜராத் மாநிலம் ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
இன்றைய தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜாம்நகர் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு பற்றி அறிவிக்கப்பட்டது, அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா என்பவரை வாரிசாக அறிவித்துள்ளனர்.

ஜாம்நகர் மன்னர் ஷத்ரு சல்யா சிங் இதுகுறித்து பேசும் போது, தசரா பண்டிகை கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், என்னுடைய உறவினரான அஜய் ஜடேஜாவை அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

மேலும், நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஜாம்நகர் மக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஜய் ஜடேஜா, தனது சேவையால் அரச குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

53 வயதான அஜய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை, 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments