Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வருஷத்துக்கு லீவ் கிளம்புங்க... துரத்தி அடிக்கும் ஏர் இந்தியா!!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (10:05 IST)
ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது எந்த நிறுவனமும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.  
 
இந்நிலையில் மீண்டும் மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக இந்த முறை ஏர் இந்தியாவின் பங்குகளை விற்று விடுவதில் மும்முரமாக இருக்கிறது. இதற்கென அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.
 
அதில் 90 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்பதென்றும் மீத 10 சதவீதத்தை மத்திய அரசு நிர்வகிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் ஏர் இந்தியாவின் கடன் சுமை குறித்து அதிகம் யோசிப்பதாக கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் தற்போதைய செய்தியின் படி ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக தனியார் நிறுவனமாக மாற உள்ளது. 
 
அதிலும் தற்போது கொரோனா காலம் என்பதால் விமான சேவை முற்றிலுமாக குறிப்பிட்ட காலம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா. 
 
ஆம், ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு ஊதியமின்றி விடுப்பில் அனுப்பும் திட்டத்துக்கு ஏர் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. 2 ஆண்டு விடுப்பு என்பதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments