Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் நீ விமானம் பக்கம் வரவே கூடாது! – கோஸ்வாமியை திட்டியவருக்கு கிடைத்த தண்டனை!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (11:03 IST)
மூத்த பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் திட்டிய காமெடி பேச்சாளருக்கு விமான நிறுவனங்கள் பறக்க தடை விதித்துள்ளன.

மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான அர்னாப் கோஸ்வாமி பயணித்து கொண்டிருந்திருக்கிறார். அவர் அருகே வந்த காமெடி பேச்சாளர் குணால் காம்ரா திடீரென கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளார்.

ஆனால் இதற்கு சற்றும் அதிர்ச்சியடையாத கோஸ்வாமி அமைதியாக காம்ரா திட்டுவதை தனது மொபைலில் பதிவு செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் பேசிய காம்ராவுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

இண்டிகோ நிறுவனம் தனது விமானங்களில் காம்ரா பயணம் செய்ய 6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது. அதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் காம்ரா தங்களது விமானத்தில் பறக்க தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments