Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

Mahendran
சனி, 14 ஜூன் 2025 (10:33 IST)
அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், நாடு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த துயர விபத்தில் 274 உயிர்கள் பலியாகிய நிலையில், உயிரிழந்தவர்களில், 56 வயதான அனுபவம் வாய்ந்த விமானி சுமீத் சபர்வால் பற்றிய உருக்கமான தகவல் வெளிவந்துள்ளது.
 
திருமணமாகாத சுமீத், மும்பையில் உள்ள தனது 90 வயது தந்தை புஷ்கராஜுடன் வசித்து வந்தார். உடல்நலம் குன்றியிருந்த தன் தந்தையை கவனிக்க, அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்ய போவதாக, விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தந்தையிடம் உறுதியளித்திருந்தாராம்.
 
 சுமீத்தின் குடும்ப நண்பர் லாண்டே என்பவர் "என் நண்பன் இறந்ததை நம்ப முடியவில்லை. விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், 'நான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து முழுநேரமும் உங்களை கவனித்துக்கொள்கிறேன்' என்று தந்தையிடம் சுமீத் உறுதியளித்தார். ஆனால், அதற்குள் இந்தத் துயரம் நடந்துவிட்டது," என்று கண்ணீருடன் கூறினார்.
 
மகனின் இழப்பால் மனம் உடைந்த தந்தை புஷ்கராஜியால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், அவரது கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருவதாகவும் லாண்டே தெரிவித்தார்.
 
 அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் மோதி வெடித்துச் சிதறியது. இந்த விபத்து, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் உள்ள கண்ணீர்க் கதைகளை வெளிப்படுத்தி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments