Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாய நிதி அதிகரிப்பு, வட்டி குறைவு, வருமானவரி விலக்கு.. etc.! – ஆண்டு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள்!

சென்னை மெட்ரோ, தமிழக சாலைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (12:52 IST)
நாளை 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த 2024ம் ஆண்டுடன் தற்போதைய பாஜக ஆட்சி நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த ஆட்சியின் கடைசி ஆண்டு பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள், உதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு முறையும் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும்போது மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் வருமான வரி வரம்பும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிகள் பொருந்தாது என்ற நிலையில் இந்த வரம்பு மேலும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia


பிரதமர் கிசான் நிதியுதவி திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதத்திற்கு ஒரு தவணை என ரூ.2 ஆயிரமாக ஆண்டுக்கு மூன்று முறை இந்த நிதி தொகை விவசாயிகளுக்கு நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. நாளை ஆண்டு பட்ஜெட்டில் இந்த தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித உயர்வால் வங்கி கடன் உதவிகளுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. முக்கியமாக வீட்டு லோனுக்கான கடன் விகிதம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கட்டுமான பொருட்களின் விலையும் கொரோனாவுக்கு பின்னர் அதிகரித்துள்ள நிலையில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் அல்லது வரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

webdunia


மேலும் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் அமைத்தல், பிரதமர் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமங்களில் சாலைகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த 2030ம் ஆண்டிற்குள் ரயில்வேயை முழுவதுமாக மின்மயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இருப்பதால் அதற்காக கணிசமான பட்ஜெட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல வந்தே பாரத் ரயில்களும் உருவாக்கப்பட உள்ளன.


கொரோனாவிற்கு பிறகு சுற்றுலா துறை தற்போது மெல்ல வளர்ச்சியடைய தொடங்கியுள்ள நிலையில் இந்திய சுற்றுலா துறை வளர்ச்சிக்கும், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட இன்ன பிற துறைகளுக்கும் போதிய அளவிலான நிதி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவில் பட்ஜெட் அமையுமா என்ற கேள்வியுடன் பலரும் பட்ஜெட் தாக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை.. என்ன காரணம்?