Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (11:26 IST)
அக்னிபத்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை டெல்லி ஹைகோர்ட் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் ராணுவம் விமானப்படை கடற்படை என முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபத் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. 
 
தேச நலனுக்காகவும் பாதுகாப்பு படை மேம்படுத்தவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளனர். 
 
இதனை அடுத்து அக்னிபத் திட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments