Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளி அஃப்சல் குருவின் மகன் 95% மதிப்பெண் எடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2016 (15:22 IST)
2001 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 2013 ஆண்டு தூக்கிலிடப்பட்ட முக்கிய குற்றவாளியான அஃப்சல் குருவின் மகன் ஹலிப் குரு 10 ஆம் வகுப்பு தேர்வில் 95% மதிப்பெண் எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறான்.


 
 
ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வித்துறை நடத்திய இந்த தேர்வில் ஹலிப் குரு 500 க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். எழுதிய 5 பாடங்களிலும் A1 மதிப்பெண்களே வாங்கியுள்ளான்.
 
கஷ்ட்டமான சூழ்நிலையிலும் சாதித்த மாணவன் என சமூக ஊடகங்களில் ஹலிப் குருவுக்கு பாரட்டுக்கள் குவிகின்றான. 2013 ஆம் ஆண்டு பாரளுமன்ற தாக்குதலுக்காக அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டாலும், அவரது மகன் புல்வாமா மாவட்டத்தில் முதல் மாணவனாக அவரது மகன் ஹலிப் குரு வந்துள்ளான்.
 
2013 ஆண்டு காஷ்மீர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஹலிப் குரு தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என தெரிவித்திருந்தான்.
 
அப்பாவுக்கு நான் ஒரு மருத்துவராக வர விரும்புவது தெரியும் அவர் என்னை அதற்காக கடினமாக உழைக்க சொல்வார். நான் அவரை ஜெயிலில் சந்திக்க செல்லும்போதெல்லாம் அதையே திரும்ப திரும்ப சொல்வார்.
 
நான் 2013 ஆகஸ்ட் மாதம் அப்பாவை சந்திக்க சென்ற போது அவர் எனக்கு குரான் புத்தகத்தையும் அதனுடன் ஒரு அறிவியல் புத்தகத்தையும் பரிசாக தந்தார் என ஹலிப் குரு தனது பேட்டியில் கூறியிருந்தான்.
 
பாராளுமன்ற தக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்டவரின் மகன் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகின்றது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments