Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 30 ஜூலை 2024 (17:52 IST)
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் மங்களூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சற்றுமுன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  மங்களூரு   - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீரடி காட் சக்லேஷ்பூர் என்ற பகுதியில் நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக மாநில அரசு தடை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவு  காரணமாக 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு தகவல் எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments