Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல், ஏர்டெல் அடுத்து வோடோபோன் அறிவித்த சலுகை

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (18:42 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலைமையை கணக்கில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என்றும் அது மட்டுமன்றி ரூபாய் 10 அவர்களுக்காக ரீசார்ஜ் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது 
 
அதேபோன்ற அறிவிப்பை ஏர்டெல் நிறுவனமும் அறிவித்தது என்பதும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என்றும் ஏர்டெல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ரீசார்ஜ் செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
இதனை அடுத்து தற்போது மற்றொரு தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி இன்டர்நெட் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களுக்கு ரூபாய் 10 ரீசார்ஜ் செய்யப்படும் என்றும் மேலும் ஏப்ரல்17ஆம் தேதி வரை காலத்தை நீட்டிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
 
கிட்டத்தட்ட மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரே மாதிரியான அறிவிப்பை செய்துள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இன்கமிங் சேவை தொடரும் என்பதும் அவர்களுக்கு கிடைக்கும் 10 ரூபா ரீசார்ஜ் மூலம் அவசர காலத்தில் போன் பேசிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments