Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பன்றிகள் அழிக்கும் பணி தீவிரம்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:00 IST)
கேரளாவின் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டு 300 பன்றிகள் அழிக்கப்படும் என அறிவிப்பு.


கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீசஸ் நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்ணை ஒன்றில் பன்றிகள் மொத்தமாக இறந்ததை அடுத்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.இப்போது பரிசோதனை முடிவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரி கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கியது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாகும்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments