பாரத பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியா? பாராளுமன்றத்தில் உளறிய அதிமுக எம்பி

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (09:54 IST)
தமிழக அரசியல்வாதிகள் மேடையிலோ அல்லது பேட்டியின்போதோ உளறுவது என்பது தற்போது சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு அரசியல் தலைவர் தப்பு தப்பாக பழமொழிகளை கூறி வருவது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்பி ஒருவர் பாராளுமன்றத்தில் பேசியபோது பாரத பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக மாநிலங்களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் நேற்று மாநிலங்களவையில் பேசியபோது, மாண்புமிகு பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறி ஒரு திட்டம் குறித்து பேசினார். மாண்புமிகு முதல்வர் என்று கூறுவதற்கு பதிலாக அவர் மாண்புமிகு பிரதமர் என்று கூறியதை அவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதும் நவநீதகிருஷ்ணன் எம்பி தனது தவறை திருத்தி அதன் பின்னர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.
 
ஏற்கனவே இதுபோன்ற உளறலுக்காக காத்திருக்கும் நெட்டிசன்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் இந்த உளறல் குறித்து கிண்டலடித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பொருப்பான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பொருப்பை உணர்ந்து பேச வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments