Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினராயி விஜயனுக்கு கூடுதல் பாதுகாப்பு - கேரள போலீஸார் அலர்ட்!!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (09:08 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

 
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். 
 
ஆனால் தற்போது அவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறி கேரள அரசியலை புறட்டிப்போடும் சில தகவல்களை அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, தங்க கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது. அவர் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என கூறினார். கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை இது கிளப்பியது. 
 
கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலும் கேரளாவுல் ஆங்காங்கே முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல், கருப்பு கொடி காட்டுதல் போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. மேலும் எதிர்கட்சியினர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
எனவே பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வழிநெடுக பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments