Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை நக்மாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மிக உயர்ந்த பதவி

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (03:10 IST)
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மா நியமனம் 
செய்யப்பட்டுள்ளார்.
 

 
கடந்த காலங்களில் தமிழ் திரையுல் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து சாதனை படைத்தவர் நடிகை நக்மா. அவரது ஸ்டைல் பெண் நடிகைளில் தனி ஸ்டைல். இதனால், பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்தார் நடிகை நக்மா. அதையும் தாண்டி இந்தி படங்களிலும் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.
 
அவ்வப்போது, காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி வந்தார். தேர்தலின் போது, தேர்தல்  பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.
 
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலின் பேரில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 
 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments